உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஹம்பி

மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஹம்பி

விஜயநகரா: நம் நாட்டில், 100 கோடிக்கும் அதிகமான டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைத்ததை போற்றும் வகையில், ஹம்பி புராதன நினைவு சின்னங்கள் மூவர்ண மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன. நம் நாட்டில், கடந்த ஜனவரி 16 முதல், நேற்று வரை , 100 கோடிக்கும் அதிகமான டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதை போற்றும் வகையில், விஜயநகர பேரரசர்கள் ஆண்ட யுனேஸ்கோ புராதன நினைவு சின்னமான, ஹம்பி கல் தேர், விஜய விட்டல கோவில், யானை கால் மண்டபம் போன்ற களுக்கு மூவர்ணங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !