உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ஆயுத பூஜை வழிபாடு

கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ஆயுத பூஜை வழிபாடு

கள்ளக் குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், ஆயுதபூஜையையொட்டி பெருமாள், தயாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில், நவராத்திரி விழா உற்சவம் துவங்கி, தினசரி மாலையில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று ஆயுத பூஜையொட்டி பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்திற்கு பின் பெருமாள் தாயார் உள்பிரகாரம் வலம் வந்து மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து சாற்றுமுறை சேவை ஆராதனைக்குப்பின், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகளை தேசிக பட்டர் செய்து வைத்தார். இதே போல், சித்திவிநாயகர் கோவில், வாசவி கன்னிகாபரமேஸ்வரி, கமலா நேரு தெ ரு காமாட்சி அம்மன், அண்ணாநகர் விஷ்ணுதுர்கை அம்மன், முடியனுார் அருணாசலேஸ்வரர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !