உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 4 கோவிலின் 1.36 லட்சம் சதுர மீட்டர் இடம் புதிய மெட்ரோ திட்டத்துக்கு ஒதுக்கீடு

4 கோவிலின் 1.36 லட்சம் சதுர மீட்டர் இடம் புதிய மெட்ரோ திட்டத்துக்கு ஒதுக்கீடு

புதிய மெட்ரோ பாதை மற்றும் நிலையங்கள் கட்டுவதற்கு, நான்கு கோவில்களுக்கு சொந்தமான 1.36 லட்சம் சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், 61 ஆயிரத்து 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில் 118.9 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கி.மீ., துாரமும், பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரைவிளக்கம் இடையே 26.1 கி.மீ., துாரமும், மாதவரம் - சோழிங்கநல்லுார் இடையே 47 கி.மீ., துாரமும் பாதை அமைக்கப்பட உள்ளது.இப்பாதைகள் அமைப்பதற்கு தேவையான இடங்கள் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இத்திட்டத்தில், பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரைவிளக்கம் மெட்ரோ பாதையில், பூந்தமல்லி பஸ் டெப்போ அருகே மெட்ரோ நிலையம் கட்டுவதற்கு, பஸ் நிலையம் மற்றும் பணிமனை அருகில், திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜபெருமாள் கோவில்களுக்கு சொந்தமான, 1 லட்சத்து 35 ஆயிரத்து 397 சதுர மீட்டர் இடம் கையகப்படுத்தப்படுகிறது.இப்பாதைக்கு ஆற்காடு சாலையில், வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 1,125 சதுர மீட்டர் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையேயான புதிய பாதையில், துரைப்பாக்கம் மெட்ரோ நிலையம் கட்டுவதற்கு, தேரடி நாகாத்தம்மன் கோவிலுக்கு சொந்தமான, 246 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

இவ்வகையில், நான்கு கோவில்களுக்கு சொந்தமான 1 லட்சத்து 36 ஆயிரத்து 768 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்துவதற்கு ஏற்பாடு நடந்து வருகிறது.மின் பணிகளுக்கு ஒப்பந்ததாரர்கள்மாதவரம் - சோழிங்கநல்லுார், மாதவரம் - சி.எம்.பி.டி., இடையே, மெட்ரோ பாதையில் மின்மயமாக்கல் பணிக்கு ஒப்பந்ததாரர்கள் நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளின் கட்டுமானங்களுக்கான ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்ட பகுதிகளில், ஆரம்ப கட்டபணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளுக்கு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை கடன் உதவி வழங்குகிறது.மெட்ரோ ரயில் பாதைகளுக்கு தேவையான மின்சார கட்டமைப்பு, வடிவமைப்பு, வினியோகம், மின் பாதை அமைத்தல், ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்வதற்கு, உலக அளவில் ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !