வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் பிரதோஷம் விழா
ADDED :1724 days ago
மேட்டுப்பாளையம்: வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், வளர்பிறை பிரதோஷம் விழா சிறப்பாக நடந்தது.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. இங்கு ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதோஷ விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. முதலில் நந்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்பு வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு, பால், தயிர், மஞ்சள், திருமஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர், தேன், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.