பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு திருக்கல்யாணம்
ADDED :1784 days ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வெளிப்பட்டினம் சித்திவிநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள மூலவர்கள் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாண உற்ஸவத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மலர் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அலங்கார மேடையில் உற்ஸவ மூர்த்திகளான பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி திருக்கல்யாணம் நடந்தது. நிர்வாகி ராதாகிருஷ்ணன் மற்றும் விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்தனர்.