உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்

சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்

உடுமலை : உடுமலை சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஐப்பசி பவுர்ணமியையொட்டி உடுமலை சக்திவிநாயகர் கோவிலில் சுவாமி சோழிஸ்வரருக்கு  அன்னாபிஷேகம் நடந்தது. அன்னாபிஷேக அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் விஸ்வநாதருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !