உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் அன்னாபிஷேகம்

திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் அன்னாபிஷேகம்

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் காலை 11 மணிக்கு திருத்தளிநாதர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னாபிஷேகம் நடந்தது. பின்னர். அஸ்திரத் தேவருடன் புறப்பாடு துவங்கியது, சீதளித் தெப்பக்குளம் அக்ராஹர படித்துறையில் அஸ்திரத்தேவர் எழுந்தருளினார். தொடர்ந்து அவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் சீதளி தடாகத்தில் அன்னம் கரைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கோயிலில் அஸ்திரத் தேவர் எழுந்தருளினர். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !