ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :1477 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 6:30 மணிக்கு கோபால விலாச மண்டபத்தில் பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி எழுந்தருளினர். சிறப்பு பூஜைகளை ராஜா பட்டர் செய்தார். பின்னர் திருப்பாவை, திருப்பல்லாண்டு சேவாகாலம், கோஷ்டி, சடாரி ஆசிர்வாதம் நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.