உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துார் கோயிலில் 6 மாதத்திற்கு பின் தங்கத் தேரோட்டம்

திருச்செந்துார் கோயிலில் 6 மாதத்திற்கு பின் தங்கத் தேரோட்டம்

திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 6 மாதத்திற்கு பிறகு நேற்று தங்கத்தேர் ஓடியது. பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். கொரோனா நோயின் தாக்கம் படிப்படியாக குறையத் துவங்கியதும், தமிழகஅரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. கடந்த வாரத்திலிருந்து, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனைத்து நாட்களிலும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்குப்பிறகு, திருச்செந்துார் கோயிலில் நேற்று தங்கத்தேர்புறப்பாடுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதனை தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடந்தன. மாலை 5:00 மணிக்கு தங்கத்தேரில் சுவாமி ஜெயந்தி நாதர்வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். பின்னர் மாலை 5:30 மணிக்கு தங்கத்தேர் புறப்பாடுக்கு, கோயில் இணைஆணையர்அன்புமணி மகள் குறிஞ்சிமலர், பணம் செலுத்தியிருந்தார். 6 மாதத்திற்கு பிறகு தங்கதேரை கோயில் இணைஆணையர்அன்புமணி, அவரது மகள் குறிஞ்சிமலர் அன்பு மணி , கோயில் அலுவலகசூப்பிரெண்ட் கோமதி, உள்துறை சூப்பிரெண்ட் ராமசுப்பிரமணியன், கோயில் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தங்கத்தேர் கிரிப்பிரகாரம் வலம் வந்து மீண்டும் 6:15 மணிக்கு நிலைக்கு வந்தது. இன்று (25ம் தேதி) முதல், பக்தர்கள் பணம் செலுத்தி தங்கத்தேர்இழுக்கலாம். இதற்காக பக்தர்களிடம் ரூ.2,500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !