உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமை வாய்ந்த மேதர் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழா

பழமை வாய்ந்த மேதர் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழா

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில், 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த, மேதர் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

மேட்டுப்பாளையம், சிறுமுகை சாலையில், 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த, மேதர் பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோவில் மிகவும் சிதிலமடைந்து இருந்தது. தற்போது புதிய மூலஸ்தானம், கோபுரம் ஆகிய திருப்பணிகள் செய்யப்பட்டன. இதன் கும்பாபிஷேக விழா, 24 ம் தேதி காலை மகா கணபதி ஹோமத்துடன், விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, முதல்கால யாகபூஜை ஹோமம் ஆகியவை நடந்தன. நேற்று காலை, 7:00 பிரம்ம சுத்தி, ரக்ஷாபந்தனம், நாடி சந்தானம், திரவிய ஹோமம், தீபாராதனை ஆகியவை நடந்தது. அதைத்தொடர்ந்து தீர்த்த குடங்களை, கோவில் சுற்றி எடுத்து வந்து கோபுர கலசத்திற்கும், விநாயகருக்கும் அபிஷேகம் செய்து கும்பாபிஷேகம் நடந்தது. இவ்விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், அருண்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராஜ், மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் வினோத், டி.எஸ்.பி., ஜெய்சிங், காரமடை ஊராட்சி ஒன்றிய தலைவர் மணிமேகலை மகேந்திரன் அரசியல் கட்சியினர் சண்முகசுந்தரம், அசரப் அலி, ஐக்கிய ஜமாஅத் தலைவர், செயலாளர் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழாக்குழுவினர் ராஜ்குமார், செந்தில், சுரேஷ் உட்பட பலர் செய்திருந்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !