கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED :1547 days ago
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், நாளை(அக். 27ல்) கும்பாபிஷேகம் நடக்கிறது.
கன்னிவாடி அருகே கசவனம்பட்டி யில் பிரசித்தி பெற்ற மவுனகுரு சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. ஆண்டுதோறும் ஐப்பசி மூல நட்சத்திரத்தில், குருபூஜை விழா நடைபெறும். வெளிமாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான சாதுக்கள் பங்கேற்பது, இதன் சிறப்பம்சம். இக்கோயிலின் கும்பாபிஷேக ஏற்பாடுகள், கடந்த ஆண்டில் துவங்கியது. இங்கு, நாளை கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கிய விழாவில், தன பூஜை கோ பூஜை நடந்தது. நான்கு கால யாக பூஜைகளை தொடர்ந்து, நாளை காலை 10 மணிக்கு செல்வவிநாயகர் கோயில், மவுன குரு சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.