உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலிறகு அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன் அருள்பாலிப்பு

மயிலிறகு அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன் அருள்பாலிப்பு

ஸ்ரீபெரும்புதுார்: தை மாத முதல் செவ்வாயான நேற்று மயிலிறகு அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன் நேற்று அருள்பாலித்தார்.


ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருபாளிக்கிறார். இக்கோவிலில், தை மாத முதல் செவ்வாய் கிழமையான நேற்று, அதிகாலை 4:30 மணிக்கு சன்னிதி திறக்கப்பட்டு, மூலவருக்கு பலவித திரவிங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரத்தில் மூலவர் காட்சியளித்தார். சஷ்டி மண்டபடத்தில் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, மயிலிறகு மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்காக பக்தர்கள் வரிசையில் வந்து, அரோகரா அரோகரா கோஷத்துடன் முருகப் பெருமானை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் விஜயகுமார், கலைச்செல்வி, மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !