உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோயில் யானை குளிப்பதற்காக புதிய நீச்சல் குளம்

ஸ்ரீரங்கம் கோயில் யானை குளிப்பதற்காக புதிய நீச்சல் குளம்

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் யானைகள் ஆண்டாள் மற்றும் லட்சுமி குளிப்பதற்காக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை சாலையில்  கோயிலுக்கு சொந்தமான  "உடையவர் தோப்பில்" 56அடி நீளம் 56 அடி அகலம் , 6.5 அடி உயரத்தில் 3 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட  புதிய நீச்சல் குளம் கட்டப்பட்டது அந்த குளத்திற்க்கு  நேற்று 25.10.2021 காலை 9.30 மணியளவில்  கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின்பு கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகிய இரண்டு யானைகளும் முதன் முறையாக  குளிக்க வைத்து பார்க்கப்பட்டது , அப்போது உதவி ஆணையர் கு. கந்தசாமி , உள்துறை கண்காணிப்பாளர் மா.வேல்முருககன் , மேலாளர் திருமதி உமா ஆகியோர் உடனிருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !