சஷ்டி விழாவுக்கு பின் திண்டலில் தேர் பவனி
ADDED :1439 days ago
ஈரோடு: சஷ்டி விழாவுக்கு பின், திண்டல் மலைக்கோவிலில், தங்க தேரோட்டம் நடக்க உள்ளது. கொரோனா ஊரடங்கால், ஈரோடு திண்டல் மலை வேலாயுத சுவாமி கோவிலில் நடந்த, தினசரி தங்கத்தேர் பவனி நிறுத்தப்பட்டது. தற்போது தளர்வால் தங்க தேரோட்டம் நடத்த, அரசு அனுமதித்துள்ளது. இந்நிலையில் ஈரோடு, திண்டல் மலை வேலாயுத சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவுக்கு பிறகு, தேரோட்டம் நடக்கும் என்று, கோவில் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.