சேலம் கோவில் கோபுரங்களில் இடிதாங்கி
ADDED :1439 days ago
சேலம்: சேலம் மாவட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. கோவில்களில், தேவைப்படும் கோபுரங்களில் இடிதாங்கி வைக்குமாறு, சென்னை ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மலை மீதுள்ள கோவில்கள் மற்றும் பழமையான கோவில்களின் ராஜகோபுரங்கள் பாதுகாக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, கோவில் செயல் அலுவலர்கள் ஆய்வு செய்து, கோபுரங்களில் இடிதாங்கி வைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.