வைகை ஆற்றில் மீனாட்சி அம்மன் சிலை கண்டெடுப்பு
ADDED :1538 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் 3 அடி மீனாட்சி அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இப்பகுதியைச் சேர்ந்த தங்கமணி பூசாரி கல்யாணசுந்தரம், முருகன் ஆகியோர் தடுப்பணை படித்துறையில் குளித்தபோது ஆற்றில் கையில் கிளி, பீடத்துடன் இருந்த மீனாட்சி அம்மன் கற்சிலையை எடுத்துள்ளனர்.பின் வழிபாடுகள் செய்தனர். வி.ஏ.ஓ.,ஜெயப்பிரகாஷ் மூலம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.