உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில்  ஆண்டு தோறும் ஸ்ரீ நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம்  9 நாட்கள் கொண்டாடப்படும். அதே போல, இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் கடந்த 24.10.2021  தொடங்கியது. இந்த விழா வருகிற 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. ஊஞ்சல் உற்சவத்தின் போது ஸ்ரீ நம்பெருமாள் உபயநாச்சிமார்களுடன்  மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின் ஊஞ்சல் மண்டபத்திற்கு மாலை 5.30 மணிக்கு வந்டைவார்.

அதன் பின் இரவு 7.15 மணிக்கு ஸ்ரீநம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆர்த்தி கண்டருள்வார். இந்த நிகழ்ச்சி இரவு 8.15 மணி வரை நடைபெறும். அப்போது ஸ்ரீநம்பெருமாள் உபயநாச்சிமார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

நெல்லளவு கண்டருளல் : இதேபோல் 2ம் திருநாள் முதல் 6ம் திருநாள் மற்றும் 8ம் திருநாள் வரை தினமும் இரவு 7.15  மணி  முதல்  இருவு 8.15 மணி வரை ஸ்ரீநம்பெருமாள் உஞ்சலாடும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.   விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ம் நாள் ஸ்ரீநம்பெருமாள் உபயநாச்சியார்களுடன்  மூலஸ்தானத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர் மாலை 6.45 மணிக்கு தாயார் சன்னிதியில் திருவந்திக்காப்பு கண்டருள்கிறார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைகிறார். அதன் பின் ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 8.15 மணி முதல் இரவு 9.15 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.  தீர்த்தவாரி : விழாவின் நிறைவு நாளான 9-ம் நாள் (நவம்பர்1ம் தேதி)  ஸ்ரீ நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு காலை 10.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம்  சென்றடைகிறார். அங்கு காலை 11.30 மணி முதல் மதியம்  1.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். மாலை 6 மணி முதல் இரவு ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். அத்துடன் ஊஞ்சல் ஊற்சவ விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !