மீன் குஞ்சுகள் நேர்த்திக்கடன்
ADDED :1535 days ago
விக்கிரமங்கலம் : விக்கிரமங்கலம் கண்மாயில் எட்டூர் கிராம மக்கள் சார்பில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் நேர்த்திக்கடனாக விடப்பட்டது.தனியாருக்கு ஏலத்திற்கு விடாமல் கண்மாய் நீர் வற்றும்போது சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்கும் மீன்பிடி திருவிழா இங்கு நடக்கும். மீன் குஞ்சுகளை கண்மாயில் விடுவதற்கு முன் கரையில் உள்ள அய்யனார், கருப்புசாமி கோயிலில் கிராமத்தினர் சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.