நாகசக்தி அம்மன் அறக்கட்டளை சார்பில் புத்தாடைகள் வழங்கல்
ADDED :1477 days ago
மலுமிச்சம்பட்டி: மலுமிச்சம்பட்டியில் நாகசக்தி அம்மன் சமூக, ஆன்மிக அறக்கட்டளை செயல்படுகிறது. இதன் சார்பில், தீபாவளி முன்னிட்டு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த, 200 பெண்கள், 50 ஆண்களுக்கு, சேலை, பேன்ட், சர்ட் வழங்கப்படடன. மேலும், மலுமிச்சம்பட்டியை சேர்ந்த, ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி பிரியதர்ஷினிக்கு, சைக்கிள் வழங்கப்பட்டது. இவைகளை அறக்கட்டளை நிறுவன தலைவர் சிவசண்முகசுந்தரபாபு வழங்கினார். அறக்கட்டளை நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.