உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகமான வாழ்வுக்கு....

சுகமான வாழ்வுக்கு....


சுகபோக வாழ்விற்கு அதிபதி சுக்கிர பகவான். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால் ஆடம்பர வாழ்வு அமையும். ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 3, 6, 8, 12 ஆகிய ராசிகளில் சுக்கிரன் மறைந்தால் யோகபலன் குறையும். தம்பதி கருத்துவேறுபாடு உண்டாகும். இதற்கான பரிகாரம் செய்வது அவசியம்.  
வெள்ளிக்கிழமை மாலையில் விளக்கேற்றி லட்சுமி தாயாருக்கு வெண்பொங்கல், வெள்ளை மொச்சை, சுண்டல் நிவேதனம் செய்து ஸ்ரீலட்சுமி துதி, மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம். வெள்ளிக்கிழமையன்று  சிவன்கோயில் தரிசனம், சிவனடியார்களுக்கு உணவளிப்பதும் நல்லது.
சுக்கிரனுக்கு உகந்த பவுர்ணமி பூஜை, சுவாசினி பூஜை, குமாரி பூஜை, பூச நட்சத்திரத்தன்று செய்யப்படும் புஷ்ய பூஜைகளை செய்வது அல்லது பங்கேற்பது நன்மையளிக்கும்.
சுக்கிரனுக்குரிய ஸ்லோகத்தை பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தன்றோ அல்லது வெள்ளிக்கிழமையிலோ 108 முறை சொல்வது மிக நல்லது.  
ஹிம்குந்த ம்ருணாலாபம்
தைத்யானாம் பரமம் குரு
சர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்க்கவம் ப்ரணமாம் யஹம்
பொருள்: பனித்துளி, முல்லை, தாமரை போன்ற மலர்களைப் போல வெண்ணிறம் கொண்டவரே! அசுரர்களின் குருவாக திகழ்பவரே! சாஸ்திர ஞானத்தில் வல்லவரே! பிருகு முனிவரின் புதல்வரே! சுக்கிர பகவானே! உம்மை போற்றுகிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !