அர்ஜூனனுக்கு ‘12’
ADDED :1469 days ago
கண்ணனுக்கு நெருங்கிய நண்பன் அர்ஜூனன். ‘அர்ஜுனன்’ என்பதற்கு ‘துாய இயல்புடையவன்’ என்பது பொருள்.
இவனுக்கு 12 சிறப்பு பெயர்கள் உண்டு.
பாண்டவன் – பாண்டுவின் மைந்தன்
தனஞ்ஜெயன்– செல்வத்தை சேகரிப்பவன்
கபித்வஜன் – குரங்குக்கொடி (அனுமன்) உடையவன்
குடாகேசன் – துாக்கத்தை வென்றவன்
பார்த்தன் – பிரிதாவின் மைந்தன்
அனகன் – பாவமற்றவன்
பரந்தாபன் – எதிரிகளை வாட்டுபவன்
கவுந்தயேன் – குந்தியின் மைந்தன்
பாரதன் – பாரதத்தில் பிறந்தவன்
கிரீடி – கிரீடம் தரித்தவன்
குருநந்தனன் – குருகுலத்தில் தோன்றியவன்
ஸ்வயஸாசின் – இடக்கையால் அம்பு எய்பவன்