உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாரம்பரிய நடனமாடி தீபாவளி கொண்டாடிய பழங்குடியினர்

பாரம்பரிய நடனமாடி தீபாவளி கொண்டாடிய பழங்குடியினர்

கூடலூர்: கூடலூர், தேன்வயல் பழங்குடி கிராம மக்கள், பாரம்பரிய இசையுடன், நடனமாடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் தேன்வயல் பழங்குடி கிராமத்தில், கூடலூர் சமரிடன் மருத்துவமனை செவிலியர்கள் சார்பிலான சேவாலயா சமாரிட்டன் அமைப்பினர் நேற்று, பழங்குடி மக்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு அமைப்பின் நிர்வாகி பிரியதர்ஷினி தலைமை வகித்தார். பா.ஜ., நகர தலைவர் ரவிகுமார் மற்றும் நிர்வாகிகள் பழங்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள், உணவுப் பொருட்கள் வழங்கினர். குழந்தைகளுக்கு பட்டாசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பழங்குடி மக்கள் பாரம்பரிய இசையுடன் பாரம்பரிய நடனம் ஆடி தீபாவளியைக் கொண்டாடினர். அவர்களின் நடனம் அனைவரையும் கவர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !