திருப்புல்லாணி கோயிலில் மண்டல பூஜை
ADDED :1470 days ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே சக்கரக்கோட்டை அப்துல்கலாம் நகரில் உள்ள முத்துமாரி அம்மன், விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கடந்த செப்.,16 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. 48வது நாள் மண்டல பூஜையை முன்னிட்டு, மூலவர்களுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பூஜைகளை உத்தரகோசமங்கை நாகநாதகுருக்கள் செய்திருந்தார். ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.