திண்டுக்கல் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :1470 days ago
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அபிராமி அம்மன், வெள்ளை விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, கூட்டுறவு நகர் செல்வ விநாயகர், சிறுமலை வெள்ளிமலை சிவன் கோயில், அகஸ்தியர்புரம் அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, நந்திக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.