திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் துவங்கியது. தொடர்ந்து10 நாட்கள் உற்ஸவம் நடக்கிறது. 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றானநம்பிராயர்ங கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அதன்படி10 நாள் உற்சவம் நேற்று துவங்கியது, தொடர்ந்து இம்மாதம் 11ம் தேதி வரை நடக்கிறது. உற்சவ நாட்களில் காலையில் பெருமாள், தாயார்களுக்கு அபிஷேகம், அலங்காரதீபாராதனை, பூஜைகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு ராமனுஜஜீயர் சுவாமிகள் முன்னிலையில், பாராயணங்கள், திவ்யபிரபந்தங்கள், ஊஞ்சல் பாட்டு படித்தல் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலையில் அழகியநம்பிராயர் பெருமாள் தாயார்களுடன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை ஜீயர்மடம் பவர் ஏஜன்ட் சிவசங்கரன் தலைமையில் அர்ச்சகர்கள் மற்றும் ஜீயர்மட ஊழியர்கள் செய்துள்ளனர்.