ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை
ADDED :1801 days ago
சின்னாளபட்டி: சின்னாளபட்டி கீழக்கோட்டை சித்தி விநாயகர் கோயிலில், ஐயப்பன் மணிமண்டபம் உள்ளது. இங்கு ஐயப்பன் சிலை பிரதிஷ்டை செய்து ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. திரவிய அபிஷேகத்தை தொடர்ந்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சரண கோஷத்துடன், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. மோகன் குருசாமி தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.