மழை வேண்டி சிறப்பு பூஜை
ADDED :20 hours ago
அழகர்கோவில்: அழகர்கோவில் காஞ்சரம்பேட்டையை அடுத்த பாறைபட்டி பேசும் கன்னிமார் கோயிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு கூட்டு வழிபாடு, சிறப்பு பூஜைகள் நடந்தன. சித்தி விநாயகர், மந்தை கருப்பசாமி சன்னதிகளில் விவசாயம் செழிக்க மழை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது.7 கன்னிமார் அம்மன்களுக்கும் பூ, எலுமிச்சை பழ மாலைகள், பட்டாடைகள் அணிவித்து நாணல் புற்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பாறைபட்டி கிராமத்தினர்செய்திருந்தனர்.