உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்பு சொத்துகள் மீட்பு

அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்பு சொத்துகள் மீட்பு

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம், அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் நேற்று மீட்கப்பட்டன.

நுங்கம்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் வடக்கு மாட வீதியில், கோவிலுக்கு சொந்தமான, 15 கோடி ரூபாய் மதிப்பிலான, 8,949 சதுர அடியிலான, ஐந்து வணிக கட்டங்கள் உள்ளன.

இவை, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தனியார் வசம் இருந்தன. இவற்றிற்கு ஆக்கிரமிப்பாளர்கள் முறையான வாடகை செலுத்தாமல் இருந்தனர்.

இதனால் கோவிலுக்கு வர வேண்டிய, 86.37 லட்சம் ரூபாய் வாடகை, நிலுவையில் இருந்தது.

இந்நிலையில், கோவில் சொத்துக்களை மீட்க, கோவில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் ஜெகன்நாத் ஆகியோர் தொடர் நடவடிக்கைகளை
மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று, இந்த சொத்துகள் மீட்கப்பட்டு, கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !