கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் சனிவார சிறப்பு வழிபாடு
ADDED :6 minutes ago
கோபால்பட்டி: சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் கார்த்திகை மாத சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத கதிர் நரசிங்க பெருமாள், ராமானுஜருக்கு பால், பழம், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. அருகிலுள்ள ஆஞ்சநேயர் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.