உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோம்நாத் கோவிலில் சங்காபிஷேகம் அவிநாசி பக்தர்கள் பங்கேற்பு

சோம்நாத் கோவிலில் சங்காபிஷேகம் அவிநாசி பக்தர்கள் பங்கேற்பு

அவிநாசி: ஸ்ரீதர்மசாஸ்தா காசி யாத்திரை குழுவினர், நுாற்றுக்கும் மேற்பட்டோர், குஜராத் சென்று, ஜோதிர்லிங்க தரிசன யாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.

ஜோதிர்லிங்கங்களில் முதலாவதாக கருதப்படும், குஜராத் மாநிலத்தில், சோம்நாதர் மற்றும் நாகேஸ்வர் ஜோதிலிங்க கோவில்கள் அமைந்துள்ளது. அத்துடன், பாண்டவர்கள் வழிபட்ட கடற்கரை சிவலிங்க கோவில், பாவ்நகரில் அமைந்துள்ளது.

அவிநாசியில் இயங்கும் ஸ்ரீதர்ம சாஸ்தா காசி யாத்திரை குழுவினர், கடந்த 25 ம் தேதி முதல், 30 ம் தேதி வரை, ஜோதிர்லிங்க தரிசனத்துக்காக, குஜராத் யாத்திரை சென்றுள்ளனர். குஜராத் மாநிலம் சென்று, முதலில் துவாரகாவில் உள்ள நாகேஸ்வரம் கோவிலில், சங்காபிஷேகம், ருத்ராபிஷேகம் பூஜைகள் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, சோநாதர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து, கடலுக்குள் இருந்து ஐந்து சிவலிங்க திருமேனிகள் காட்சிதரும், நிஷ்களங்க் மகாதேவ் கோவிலில் வழிபட்டனர்.

புண்ணியம் பெறலாம்


இதுகுறித்து ஸ்ரீதர்ம சாஸ்தா காசி யாத்திரை குழு ஒருங்கிணைப்பாளர் ஆரூர சுப்பிரமணிய சிவம் கூறியதாவது:

ஜோதிர்லிங்க தரிசனத்துக்காக, 125 பக்தர்களுடன் குஜராத் வந்துள்ளோம். சோம்நாத், நாகேஸ்வரம் கோவில்களை தொடர்ந்து, பாண்டர்வகளுக்கு அருள்பாலித்த நிஷ்களங்க் மகாதேவ் கோவிலில் சிறப்பு யாகபூஜையுடன் வழிபாடு நடத்தினோம். மஹாபாரத போரில், பலரை கொன்ற பாவம் தொற்றியதால், பாண்டவர்கள் வருந்தனர்.

வெள்ளை பசு மற்றும் கொடியை வழங்கி, எந்த இடத்தில் கறுப்பு நிறமாக மாறுகிறோ அங்கு சிவபெருமான் காட்சியளித்து, பாவங்களை போக்குவார் என்ற கிருஷ்ண பகவான் வழிகாட்டினார். அவ்வாறு, பாண்டவர்கள் வரும் போது, கடற்கரை அருகே, பசுவும், கொடியும் கறுப்பு நிறமானது. கடலுக்குள் இருந்து, பஞ்ச லிங்க திருமேனிகள் காட்சியளித்தன.

பாண்டவர்களும் மனமுருகி வழிபட்டதால், பாவம் நீங்கப்பட்டனர். பாண்டவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, சிவபெருமான், கடலுக்குள் இருந்தபடி, இன்றும் அருள்பாலிக்கிறார். தினமும் குறிப்பிட்ட, 2 மணி நேரம் கடல் உள்வாங்கும் போது, பஞ்ச லிங்க திருமேனிகளை தரிசனம் செய்து புண்ணியம் பெறலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !