உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் பிரகாரத்தில் சாய்ந்த தேக்கு மரங்கள்

கோயில் பிரகாரத்தில் சாய்ந்த தேக்கு மரங்கள்

தேவதானப்பட்டி: தேவதானப் பட்டி அருகே மஞ்சளாறு நதிக்கரையில் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

கோயில் கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது ஆண்டு முழுவதும் பக்தர்கள் வழங்கும் நெய்யினால் இரவு, பகல் அணையாத நெய் விளக்கு எரிகின்றது.

சில தினங்களுக்கு முன்பு பெய்த பலத்த காற்று, மழையில் 20 வயதுடைய தேக்கு மரங்கள் ஆறு வேரோடு சாய்ந்து கோயில் பிரகார சுவரில் விழுந்துள்ளது. இதனால் அந்தப்பகுதி சேதமடைந்துள்ளது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். கோயில் நிர்வாகம் விழுந்த மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,‘ இதுபற்றி மாவட்ட நிர்வாகம் பசுமை தீர்ப்பாயம், தேவதானப்பட்டி வனச்சரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது,’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !