/
கோயில்கள் செய்திகள் / 53 கிராமங்களில் எங்கிருந்து பார்த்தாலும் தெரிந்த திருப்பரங்குன்றம் தீபத்துாணில் ஏற்றிய தீபம்
53 கிராமங்களில் எங்கிருந்து பார்த்தாலும் தெரிந்த திருப்பரங்குன்றம் தீபத்துாணில் ஏற்றிய தீபம்
ADDED :1 minutes ago
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் நிர்வாகப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோரது நேரடி மேற்பார்வையில், நேற்று (நவம்பர் 28) மாலை 5 மணியளவில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றியதை மலை அடிவாரத்திலிருந்து, சுப்பிரமணியசுவாமி கோயில் முன்பிருந்து பக்தர்கள் தரிசித்தனர். ரயில்வே மேம்பாலத்தில் நின்று பார்த்தால் மிக தெளிவாக தெரிந்தது. பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி அலைபேசியில் செல்பி எடுத்தனர். கண்களுக்கு எட்டும் துாரம் அதாவது மலையை சுற்றிலும் உள்ள 53 கிராமங்களில் வசிப்பவர்களுக்கு தீபத்தின் சுடரொளி பிரகாசமாக தெரிந்தது. மக்கள் துாரத்திலிருந்தும் தரிசித்தனர்.