உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடலூர் சத்திய ஞான சபையில் கார்த்திகை பூச ஜோதி தரிசனம்

வடலூர் சத்திய ஞான சபையில் கார்த்திகை பூச ஜோதி தரிசனம்

வடலூர்: வடலூர் சபையில் மாத பூச ஜோதி தரிசனம் நடந்தது.


வடலூர் சத்திய ஞான சபையில் மாத பூச தினமான நேற்று, கார்த்திகை மாத ஜோதி தரிசனம் நடந்தது. இரவு 7:45 மணிக்கு ஆறு திரைகள் விலக்கப்பட்டு, 8:45 மணி வரை மூன்று காலங்களாக ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. நிகழ்வில் வடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலிஃ சேத்தியாத்தோப்பு சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்தோர், சேலம் திருவண்ணாமலை அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சன்மார்க்கர்கள் கலந்து கொண்டு, அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை மகா மந்திரம் முழங்க, ஜோதி தரிசனம் செய்தனர். வடலூர் நகர வியாபாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் சார்பில் பெருவெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்