உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் பணியை செய்த பாரம்பரிய தீப மிராசுதாரர்கள் குழு!

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் பணியை செய்த பாரம்பரிய தீப மிராசுதாரர்கள் குழு!

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் பணிகளை செய்தவர்கள் பாரம்பரிய தீப மிராசுதாரர்கள் குழு ஆகும். 6 பேர் கொண்ட பாரம்பரிய தீப மிராசுதாரர்கள் குழுவினர் திருவண்ணாமலையில் இருந்து வருகை தந்தவர்கள்.   பாரம்பரிய தீப மிராசுதாரர்கள் குழு என்பது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்பட முக்கிய கோவில்களில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மலை உச்சியில் மகாதீபம் ஏற்றும் பரம்பரை உரிமை (அதாவது மிராசு எனப்படுபவர்கள்) பெற்றவர்களை கொண்ட குழு ஆகும்.  திருவண்ணாமலையை தொடர்ந்து, திருப்பரங்குன்றம் போன்ற திருத்தலங்களில் கார்த்திகை தீபம் ஏற்றும் மரபுசார் பாணிகளில் இக்குழுவினர் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர்.


பாரம்பரிய தீப மிராசுதாரர்கள் பணிகள்;  பல்வேறு தலைமுறைகளாக மலை உச்சியில் தீபம் ஏற்றும் உரிமை, பொறுப்பை இக்குடும்பத்தினர் மரபு வழியாக கொண்டு இருக்கின்றனர். 

மகா தீபம் கொப்பரையை மலையின் உச்சிக்கு கொண்டு செல்வது, காடா துணியை அமைப்பது, நெய் நிரப்பி, தீபத்தை ஏற்றி பராமரிப்பது இவர்களின் பணி.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !