அழகர்கோவில் மலைமேல் உள்ள இராக்காயி அம்மன் கோவிலில் வருடாபிஷேகம்
ADDED :4 minutes ago
அழகர்கோவில்: அழகர்கோவில் மலைமேல் இராக்காயி அம்மன் கோவில் உள்ளது. இன்று மண்டபத்தில் வருடாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இராக்காயி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தீர்த்தம், உள்ளிட்ட பல்வேறுஅபிஷேக அலங்காரங்கள் தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமானோர் காலையிலிருந்து மாலை வரை, நூபுர கங்கையில் புனித நீராடி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கள்ளழகர் கோயில் இணை ஆணையர் பொன் சுவாமிநாதன் செய்திருந்தார்.