உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் நாளை தீப தூணணில் தீப தரிசனம் காண வரும் பக்தர்கள் ஒரு லட்சம் பேருக்கு அகல் விளக்கு

திருப்பரங்குன்றத்தில் நாளை தீப தூணணில் தீப தரிசனம் காண வரும் பக்தர்கள் ஒரு லட்சம் பேருக்கு அகல் விளக்கு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தீப தூணில் நாளை கார்த்திகை மகா தீப தரிசனம் காண வரும் பக்தர்கள் ஒரு லட்சம் பேருக்கு அகல் விளக்குகள் வழங்க ஹிந்து மக்கள் கட்சி, சிவசேனா ஏற்பாடு செய்துள்ளதாக ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தெரிவித்தார்.


சோலை கண்ணன் கூறியதாவது: தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை இன்று மீண்டும் உச்ச நீதிமன்றம் வழகியுள்ளது. மலை மேல் தீபத்தூணில் தீபம் காண தமிழக முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தர உள்ளனர். அவர்கள் நகர் முழுவதும் தீபம் ஏற்றுவதற்காக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அகல் விளக்குகள், எண்ணெய், திரி, அன்னதானம், தண்ணீர் பாட்டில், அனைத்து பக்தர்களும் தீப தரிசனத்தை காண்பதற்காக நகர் முழுவதும் பத்து இடங்களில் எல்.இ.டி., திரைகள், நகர் முழுவதும் அலங்கார மின் விளக்குகள், தீப தூணில் தீபம் ஏற்ற செல்வதற்கு வசதியாக தற்காலிக படிக்கட்டுகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தவிர திருப்பரங்குன்றத்தில் வசிக்கும் மக்கள் அனைத்து வீடுகளுக்கும் அகல் விளக்குகள் வழங்கப்பட உள்ளது. நாளை காலை 10:00 மணிக்கு 108 பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட உள்ளது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !