உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பால் வடியும் வேப்ப மரத்துக்கு பெண்கள் சிறப்பு வழிபாடு

பால் வடியும் வேப்ப மரத்துக்கு பெண்கள் சிறப்பு வழிபாடு

அன்னூர்: அன்னூர், தென்னம்பாளையம் சாலையில், ஆலாம்பாளையத்தில் பழமையான வேப்பமரம் உள்ளது. இன்று காலை இந்த மரத்தின் மேல் பகுதியில் இருந்து, பால் வடிய துவங்கியது. மதியம் வரையும் பால் வடிந்து கொண்டே இருந்தது. இது குறித்து தகவல் பரவியதை அடுத்து, ஆலாம்பாளையம், குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பெண்கள் அங்கு வந்தனர். மரத்தைச் சுற்றி தூய்மைப்படுத்தினர். மஞ்சள், குங்குமம் இட்டு வேப்ப மரத்திற்கு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !