உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாலவாக்கம் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

சாலவாக்கம் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

சாலவாக்கம்: சாலவாக்கம் அடுத்த ரெட்டமங்கலம் கிராமத்தில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில்  இன்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.


சாலவாக்கம் அடுத்த ரெட்டமங்கலம் கிராமத்தில், வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, கடந்த 25ம் தேதி காலை 10:00 மணிக்கு கோ பூஜை, கணபதி பூஜை, மாலை 5:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று காலை 9:30 மணிக்கு இரணடம் கால யாகசாலை பூஜை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து, இன்று காலை 8:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, காலை 10:15 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு விநாயகர் வீதியுலா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !