உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடித்து ரூ.2 கோடி கோவில் நிலம் மீட்பு

ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடித்து ரூ.2 கோடி கோவில் நிலம் மீட்பு

சவுகார்பேட்டை: ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடத்தை இடித்து, ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 2 கோடி ரூபாய் மதிப்பிலான இடம் மீட்கப்பட்டது. சவுகார்பேட்டை, தங்கச்சாலை தெருவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக, 660 சதுர அடி கோவில் நிலம், அதே தெருவில் உள்ளது. இந்த நிலத்தை ஆக்கிரமித்து, கட்டடம் அமைத்திருந்தனர். இது குறித்த புகாரை அடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ராமு அறிவுறுத்தலின்படி, உதவி கமிஷனர் புவனேஸ்வரி தலைமையிலான செயல் அலுவலர் சண்முகம் மற்றும் அதிகாரிகள், போலீசாரின் பாதுகாப்புடன் நேற்று, ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடித்து அகற்றி ‘சீல்ʼ வைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு, 2 கோடி ரூபாய் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !