திருவாமாத்துார் அபிராமேஸ்வரர் கோவிலிற்கு மாணவர்கள் நடைபயணம்
ADDED :1 minutes ago
விழுப்புரம்: விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில், உலக மரபு வார விழாவை முன்னிட்டு, வரலாற்று சிறப்பு மிக்க திருவாமாத்துார் அபிராமேஸ்வரர் கோவிலிற்கு, மாணவர்கள் மரபு நடைபயணம் சென்றனர்.
விழுப்புரம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் வீரராகவன் தலைமை வகித்தார். அரசு கல்லுாரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ், கோவிலின் வரலாற்று சிறப்புகளை விரிவாக எடுத்துரைத்தார். மேலும், புதிதாக கண்டறியப்பட்ட கல்வெட்டுகளின் அடிப்படையில், பல்வேறு காலகட்டங்களில் இக்கோவிலும், திருவாமாத்துார் ஊரும் பெற்றிருந்த வரலாற்று சிறப்புகள் குறித்தும், கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள இவ்வூரைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார். வரலாற்று ஆய்வு மைய நிர்வாகிகள் சிவபாண்டியன், முகுந்தன் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.