உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் வந்த சிஆர்பிஎப் படையினரை மலர் தூவி வரவேற்ற பக்தர்கள்

திருப்பரங்குன்றம் வந்த சிஆர்பிஎப் படையினரை மலர் தூவி வரவேற்ற பக்தர்கள்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவெக அரசு தவறியது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், இன்று மாலை ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்காணிப்பில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, தமிழக போலீஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டு, மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையை (சிஆர்பிஎப்) குவிக்கவும் ஆணையிடப்பட்டது. தீபம் ஏற்றுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், பாதுகாப்பு பணிக்காக சிஆர்பிஎப் படையினர் திருப்பரங்குன்றம் வந்தடைந்தனர். அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள், அவர்களை மலர் தூவி வரவேற்றனர். அப்போது, கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற முழக்கங்களையும் பக்தர்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !