உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் குவியும் பக்தர்கள்: அரோகரா கோஷத்துடன் பரவசம்

திருப்பரங்குன்றத்தில் குவியும் பக்தர்கள்: அரோகரா கோஷத்துடன் பரவசம்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி தீபம் ஏற்றப்படுகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை முதல் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.


நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு இந்த அனுமதி கிடைத்துள்ளது. கார்த்திகை தீப நாளில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் வரை ஹிந்து அமைப்பினர் சென்று போராடி அனுமதி பெற்றனர். ஆனாலும் திமுக அரசு பாணியில் தவெக அரசும் தீபம் ஏற்ற மறுத்துவிட்டது. அறங்காவலர் குழு, கோவில் நிர்வாகம் மீது பழி சுமத்திவிட்டு தப்பிக்க முயற்சித்தது. முருகனின் அருளால் அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த சுப்ரீம்கோர்ட் இன்றே தீபம் ஏற்ற அதிரடி உத்தரவிட்டது. இன்று மாலை தீபம் ஏற்றப்பட இருக்கிறது. தற்போது சிஆர்பிஎப் வீரர்கள் மலை மீது சென்றுள்ளனர். இன்று காலை பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரவுள்ளனர். மலையைச் சுற்றிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !