உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி மடாதிபதிகள் முன்னிலையில் கோலாகலமாக நடந்த குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

காஞ்சி மடாதிபதிகள் முன்னிலையில் கோலாகலமாக நடந்த குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம், காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாசார்ய சுவாமிகள் ஆகியோரது  முன்னிலையில் இன்று காலை கோலாகலமாக நடந்தது. 


காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று அதிகாலை நடைபெற்றது. இதையொட்டி கடந்த 25ம் தேதி முதல், வேதவிற்பன்னர்கள் பிரபாகர் குருக்கள், காமேஸ்வர குருக்கள் தலைமையில் 100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களால் மூலம் யாசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. இதில், நான்காவது நாளான நேற்று காலை 8:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், மாலை 5:00 மணிக்கு ஐந்தாவது கால யாகசாலை பூஜை நடந்தது. இதில், காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பார்வையிட்டு பூஜைகள் சிறப்பாக நடைபெறுவதாக பாராட்டினார். தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கும், தண்டாயுதபாணி சன்னிதிக்கும் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், தண்டாயுதபாணிக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டார். இதில், இளைய சங்கராச்சாரியார் சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளும் யாகசாலை பூஜையில் பங்கேற்றார். மாலையில் நடந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பல்வேறு கோவில் அர்ச்சகர்களுக்கு வஸ்திரம் மற்றும் சன்மானம் வழங்கினார். தொடர்ந்து இன்று காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாசார்ய சுவாமிகள் ஆகியோரது  முன்னிலையில்  காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில், வெளிநாடு வாழ் தமிழர்கள்  நலத்துறை அமைச்சர் தென்னரசு, வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !