உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொளஞ்சியப்பர் கோவிலில் ஐகோர்ட் நீதிபதி தரிசனம்

கொளஞ்சியப்பர் கோவிலில் ஐகோர்ட் நீதிபதி தரிசனம்

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர், கொளஞ்சியப்பர் கோவில்களில் ஐகோர்ட் கிளை நீதிபதி புகழேந்தி தரிசனம் செய்தார்.

விருத்தாசலத்தில் உள்ள பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில், சென்னை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி புகழேந்தி நேற்று மாலை தரிசனம் செய்தார். பின்னர், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து, கும்பாபிஷேக திருப்பணிகளை பார்வையிட்ட அவர், கோவில் கொடிமரம் அருகே பக்தர்கள் உப்பு கொட்டியும், விளக்கேற்றியும் வழிபடுவதற்கு பதிலாக மாற்று இடம் ஒதுக்கி தருமாறு கோவில் ஊழியர்களிடம் அறிவுறுத்தினார்.

அப்போது, கும்பாபிஷேக திருப்பணி கமிட்டி செயலாளரும், ஜோதிடருமான, வித்யாதரன், அறநிலையத்துறை ஊழியர்கள், சிவாச்சாரியார்கள் உடனிருந்தனர். நீதிபதி புகழேந்தி, விருத்தாசலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !