உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலைக்கேணியில் கந்த சஷ்டி விழா தொடங்கியது

திருமலைக்கேணியில் கந்த சஷ்டி விழா தொடங்கியது

நத்தம், திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது. நத்தம் பகுதியில் பிரசித்தி பெற்ற கீழ் பழனி என்றழைக்கப்படும் திருமலைக்கேணி சுப்ரமணியசாமி முருகன் கோவிலில், 7 நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஆறாவது நாள் சூரசம்ஹாரம் நடைபெறும். ஏழாவது நாள் வள்ளி தெய்வானையுடன் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இந்த விழாவில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !