வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை
ADDED :1444 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவிலில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று வீரக்குமாரசாமி தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
ஓலப்பாளையம், முருக்கங்காட்டுவலசு தம்பிக்கலையசுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர். இதேபோல வெள்ளகோவில் சோழீஸ்வரசுவாமி, நாட்டராய சுவாமி கோவில், வீரசோழபுரம் அடஞ்சாரம்மன் திருக்கோவில், ஏரி மொண்டிக் கருப்பணசாமி கோவில், ஆணைமேல் அழகியம்மன் கோவில், உட்பட வெள்ளகோவில், முத்தூர் பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பக்தர்கள் குடும்பத்துடன் அதிகளவில் கலந்துகொண்டு தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.