உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன் கோவிலில் நிரம்பிய பக்தர்கள் கூட்டம்

பத்ரகாளியம்மன் கோவிலில் நிரம்பிய பக்தர்கள் கூட்டம்

மேட்டுப்பாளையம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வனபத்ரகாளியம்மன் கோவிலில், பக்தர்கள் கூட்டம் நிரம்பியது.

கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், விடுமுறை நாட்களிலும் ஏராளமான பக்தர்கள், கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம். நேற்று அமாவாசையை முன்னிட்டு கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆனால், அன்று தீபாவளி பண்டிகை என்பதால், பக்தர்கள் அதிகளவில் கோவிலுக்கு வரவில்லை. இன்று வெள்ளிக்கிழமை என்பதால், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். கோவில் நடை காலை, 5:00 மணிக்கு திறந்து, அம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, 6:00 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு நடை திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, அம்மனை வழிபட்டுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !