உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை ஏழுமலையான் கோயிலில் காணிக்கை ரூ.4.16 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் காணிக்கை ரூ.4.16 கோடி

திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், தரிசனம் செய்த பின் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை தேவஸ்தானம் சில்லரை, ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு கரன்சிகள் என பிரித்து கணக்கிடுகிறது. அவ்வாறு பக்தர்கள், தீபாவளிக்கு முந்தைய நாள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் 4.16 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இது கடந்த சில மாதங்களில் வசூலான, உண்டியல் வருவாய்களில் அதிகபட்சமானது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !