உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துார் மூலவருக்கு ரூ.12 லட்சம் தங்கச்செயின்

திருச்செந்துார் மூலவருக்கு ரூ.12 லட்சம் தங்கச்செயின்

திருநெல்வேலி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்னை சரவணா ஸ்டோர் அதிபர் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 270 கிராம் எடையுள்ள டாலருடன் கூடிய தங்க செயின் உபயமாக வழங்கினார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சென்னை , சூப்பர் சரவணா ஸ்டோர் உரிமையாளர் ராஜரத்தினம் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவர் மூலவரான முருகன் கழுத்தில் அணிவதற்காக 270 கிராம் எடையுடைய ஒரு பக்கம் வேலும், மயிலும், மறு பக்கத்தில் ஓம் சரவணபவ என பொறித்த டாலருடன் கூடிய தங்க செயினை உபயமாக வழங்கினார். இதன் மதிப்பு ரூ.12 லட்சம். அதனை கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் உள்துறை கண்காணிப்பாளர்  ராமசுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் கோயில் மணியம் ரமேஷ், பணியாளர் வேல்முருகன், ஸ்தலத்தார் அரிஹரசுப்பிரமணியன், கட்டளை அய்யர்கள் சுப்பையா , ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !