உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

அன்னூர்: அ.மேட்டுப்பாளையம், கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

அ.மேட்டுப்பாளையத்தில், பழமையான ஸ்ரீதேவி, பூதேவி, சமேதர கரிவரதராஜ பெருமாள், கெங்கம்மாள், ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் புதிதாக பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து நான்காவது கும்பாபிஷேகம் நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலையில், கோ மாதா பூஜை, முதற்கால யாக பூஜை ஆகியவை நடந்தன. இன்று மாலை, விமான கலசம் வைத்தல், யாக பூஜை, பரிவார சுவாமிகளை பிரதிஷ்டை செய்தல், மூல மூர்த்திகள் மற்றும் பரிவார சுவாமிகளை பிரதிஷ்டை செய்தல் ஆகியவை நடக்கிறது. நாளை காலை 9:00 மணிக்கு, பெருமாள், கெங்கம்மாள், ஆஞ்சநேயர் மற்றும் கோபுரத்திற்கு, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !